மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 July 2021 1:57 AM IST (Updated: 28 July 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுத்தமல்லி சாலையில் சில வீடுகளில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக தா.பழூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக சுத்தமல்லி சாலையில் வசிக்கும் சத்யராஜின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 16 மது பாட்டில்களும், தங்கமணி (45) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களும், சின்னையன் (60) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களும், செல்வம் (49) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 மது பாட்டில்களும், முருகேசன் (43) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 மது பாட்டில்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. மேலும் சட்டவிரோதமாக மது விற்ற சின்னையன், செல்வம், முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சத்யராஜ், தங்கமணி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் தா.பழூர் போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story