கர்நாடகத்தில் புதிதாக 3 துணை முதல்-மந்திரிகள் நியமனம்


கர்நாடகத்தில் புதிதாக 3 துணை முதல்-மந்திரிகள் நியமனம்
x
தினத்தந்தி 27 July 2021 8:53 PM GMT (Updated: 27 July 2021 8:53 PM GMT)

கர்நாடகத்தில் 3 பேர் புதிய துணை முதல்-மந்திரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதாவது கோவிந்த் கார்ஜோள், ஸ்ரீராமுலு, ஆர்.அசோக்கிற்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

பெங்களூரு:
  
பசவராஜ் பொம்மை தேர்வு

  கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று முன்தினம் ராஜினாமா செய்து இருந்தார். இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்து எடுப்பதற்காக மேலிட பொறுப்பாளர்கள் அருண் சிங், தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி தலைமையில் நேற்று பெங்களூருவில் உள்ள ஓட்டலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடக புதிய முதல்-மந்திரியாக ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதி எம்.எல்.ஏ.வும், எடியூரப்பாவின் மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக பணியாற்றிய பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார்.

  எடியூரப்பா மந்திரிசபையில் கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவி வகித்தனர். இந்த நிலையில் கோவிந்த் கார்ஜோளுக்கு மீண்டும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. மற்ற 2 பேருக்கு பதிலாக ஸ்ரீராமுலு, ஆர்.அசோக் ஆகியோருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

கோவிந்த் கார்ஜோளுக்கு மீண்டும் வாய்ப்பு

  இவர்களில் கோவிந்த் கார்ஜோள், ஆர்.அசோக் 2-வது முறையாக துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிய துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் தலித் சமூகத்தை சேர்ந்தவர். ஸ்ரீராமுலு வால்மீகி சமுதாயத்தை சோ்ந்தவர். ஆர்.அசோக் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். சாதி அடிப்படையில் இவர்களுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

  இதன்மூலம் அந்த சமூகங்களின் வாக்குகளை கவர பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பாவின் மந்திரிசபையில் ஸ்ரீராமுலு சமூக நலத்துறை மந்திரியாகவும், ஆர்.அசோக் வருவாய்த்துறை மந்திரியாகவும் பணியாற்றினர்.

Next Story