மாவட்ட செய்திகள்

பா.ஜனதா மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் - மூத்த எம்.எல்.ஏ.க்கள் பேட்டி + "||" + We will be bound by the decision of the BJP upper house

பா.ஜனதா மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் - மூத்த எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

பா.ஜனதா மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் - மூத்த எம்.எல்.ஏ.க்கள் பேட்டி
புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் விஷயத்தில் பா.ஜனதா மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று மூத்த எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.
பெங்களூரு:

புதிய முதல்-மந்திரி

  புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் விஷயத்தில் பா.ஜனதா மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று மூத்த எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ள முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  நான் தான் அடுத்த முதல்-மந்திரி என்று எங்கள் கட்சி தலைவர்கள் கூறவில்லை. முதல்-மந்திரி பதவியோ அல்லது மந்திரி பதவியோ எது கிடைத்தாலும் நான் பணியாற்ற தயாராக உள்ளேன். அல்லது எந்த பதவி இல்லை என்றாலும் நான் ஒரு சாமானிய தொண்டராக கட்சி பணி ஆற்றுவேன். கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வோம். புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் எந்த குழப்பமும் இல்லை.
  இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.

மேலிடத்தின் மீது நம்பிக்கை

  துணை முதல்-மந்திரியாக பணியாற்றிய அஸ்வத் நாராயண் கூறுகையில், "எங்கள் கட்சி ஒழுங்கு முறையுடன் நடைபெறும் கட்சி. புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த விஷயத்தில் கட்சியின் முடிவே இறுதியானது. யார் அடுத்த முதல்-மந்திரி என்பது இன்னும் தெரியவில்லை. அது எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் தெரியவரும்" என்றார்.

  கூட்டுறவுத்துறை மந்திரி பதவி வகித்த எஸ்.டி.சோமசேகர் கூறும்போது, "பா.ஜனதா மேலிடத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எனக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சி மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்" என்றார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

  கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பேட்டி அளிக்கையில், "புதிய முதல்-மந்திரியை தேர்ந்து எடுக்க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அவர்களின் கருத்துகள் சேகரிக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்த முதல்-மந்திரி யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். அந்த முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். 

முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நான் இல்லை. ஆனால் அந்த பதவியை எனக்கு வழங்கினால் அதை ஏற்க நான் தயாராக உள்ளேன். கட்சி என்ன பொறுப்பு வழங்குகிறதோ அதை ஏற்று செயல்படுவேன். நான் கட்சியின் நம்பிக்கைக்கு பாத்திரமான தொண்டன். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதை நான் ஆதரிக்கிறேன்" என்றார்.