மாவட்ட செய்திகள்

அரசு ஊழியரின் வீட்டில் 9½ பவுன் நகை, பணம் திருட்டு + "||" + 9.5 savaran of jewelery and Rs 49,000 were stolen from the house of a government employee.

அரசு ஊழியரின் வீட்டில் 9½ பவுன் நகை, பணம் திருட்டு

அரசு ஊழியரின் வீட்டில் 9½ பவுன் நகை, பணம் திருட்டு
அரசு ஊழியரின் வீட்டில் 9½ பவுன் நகை மற்றும் ரூ.49 ஆயிரம் திருட்டு போனது.

கே.கே.நகர், ஜூலை.28-
திருச்சி, கே.கே. நகர் அய்யப்பன் நகர், பிருந்தாவன் தெருவை சேர்ந்தவர் டேவிட் மைக்கேல் குமார் (வயது 54). இவர் ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள மட்டபாறை பட்டியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். கடந்த 25-ந்தேதி மாலை அந்த வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். பின்னர் மறுநாள் காலை பழைய வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9½ பவுன் நகை மற்றும் ரூ.49 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.