மாவட்ட செய்திகள்

சிறையில் சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு + "||" + Judge refuses to allocate special room to Sivashankar Baba in jail

சிறையில் சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு

சிறையில் சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு
சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷணல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இவர் மீது 3 போக்சோ வழக்குகள் உள்ள நிலையில் ஜாமீன் கேட்டு கடந்த வாரம் செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபா தரப்பில் அவரது வக்கீல் மனுதாக்கல் செய்திருந்தார். அப்போது அவருக்கு ஜாமீன் தர மறுத்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

சிறப்பு அறை

இதனையடுத்து சிறையில் உள்ள சிவசங்கர்பாபாவுக்கு சிறையில் சிறப்பு வகுப்பு அறை வழங்கக்கோரி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் சிவசங்கர் பாபா தரப்பில் கடந்த 22-ந்தேதி மனு அளித்திருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி சிறையில் சிறப்பு வகுப்பு அறையை வழங்க அனுமதி மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து தற்கொலை செய்த பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு
தஞ்சை அருகே தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் பிரேத பரிசோதனை முடிந்த பின்னரும் ஒப்படைக்க முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள்.
2. டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு
டெல்லி குடியரசு தினவிழா அணி வகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3. கேரள அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
கேரள அரசின் ஸ்ரீ நாராயண குருவின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்து உள்ளது.
4. குடியரசு தின விழா அணிவகுப்பு; மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு
குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மம்தா பானர்ஜிஅதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
5. கொரோனா மாத்திரை தீங்குகள் அதிகம்; இந்தியாவில் அனுமதி மறுப்பு
கொரோனா மாத்திரையின் தீங்குகள் அதிகம் என கூறி இந்தியாவில் அதனை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.