மாவட்ட செய்திகள்

பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி + "||" + A youth drowned in a lake near Ponneri

பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தீர்த்தம்கரைபட்டு கிராமத்தில் உள்ள சேரன் தெருவை சேர்ந்தவர் ராகுல் (வயது 21). இவர் தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் சோழவரம் பகுதியில் உள்ள பூதூர் ஏரிக்கு குளிக்க சென்றார்.


இந்த ஏரியில் மண் எடுத்து பள்ளம் ஆழமாக இருந்ததில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் குளிக்க சென்ற ராகுல் நீண்ட நேரமாக கரை திரும்பவில்லை. இது குறித்து அவரது நண்பர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சாவு

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஏரியில் மூழ்கி சேற்றில் சிக்கி இறந்த ராகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆற்றில் மூழ்கி மாணவி உள்பட 3 பெண்கள் பலி
குளித்துவிட்டு கரையேறியபோது ஆற்றில் மூழ்கி மாணவி உள்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
2. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலி
ஈஞ்சம்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலியானார். டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
3. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலி
ஈஞ்சம்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலியானார். டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4. ஒரகடம் அருகே வாலிபர் குத்திக்கொலை
ஒரகடம் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
5. ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலி
ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலியான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.