மாவட்ட செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி + "||" + Heavy rains in Vedaranyam area - Farmers happy

வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேதாரண்யம், 

வேதாரண்யம் தாலுகா முழுவதும் கடந்த 10 நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.இந்த நிலையில் வேதாரண்யம், கோடியக்கரை, கோடியக்காடு, கருப்பம்புலம், நெய்விளக்கு, குரவப்புலம், மருதூர், கரியாப்பட்டினம், தேத்தாகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் பலத்த மழை பெய்தது. 

இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வாக பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவியது, குறுவை சாகுபடிக்கு ஏற்ற நேரத்தில் மழை பெய்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வடக்கு விஜயநாராயணம் பெரிய குளம் நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி
வடக்கு விஜயநாராயணம் பெரிய குளம் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2. புகைப்பட்டி ஏரி நிரம்பி வழிகிறது விவசாயிகள் மகிழ்ச்சி
புகைப்பட்டி ஏரி நிரம்பி வழிகிறது விவசாயிகள் மகிழ்ச்சி