வேதாரண்யம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு யாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜன் (வயது43). விவசாயி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேஷ் (36) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் துரைராஜன் சம்பவத்தன்று குளத்திற்கு குளிக்க சென்றபோது அவரை வெங்கடேஷ் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து துரைராஜன் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story