மாவட்ட செய்திகள்

நாகையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + admk protest

நாகையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை:-
நாகையில் கட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்க.கதிரவன், வெளிப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
அதேபோல் மேலவாஞ்சூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மீனவர் அணி இணைச்செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க.வினர் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், இலக்கிய அணி இணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓ.எஸ்.மணியன் கூறுகையில், ‘நீட் தேர்வை ரத்து செய்வது, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றாவிட்டால் அ.தி.மு.க.வின் போராட்டம் தொடரும்’ என்றார். நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.