தர்மபுரி அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தர்மபுரி அருகே ராணுவவீரர் வீட்டில் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே ராணுவவீரர் வீட்டில் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணுவவீரர்
தர்மபுரி அருகே உள்ள ஏமக்குட்டியூரை சேர்ந்தவர் ஜெயபால். ராணுவ வீரர். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது29). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் வெங்கட்டம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். மறுநாள் காலை அவர் வீடு திரும்பியபோது வீட்டின் இரும்பு கேட் மற்றும் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணி உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, வெள்ளி குத்துவிளக்கு, குங்குமச்சிமிழ் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
வலைவீச்சு
வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டுகளை உடைத்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மகாலட்சுமி மதிகோன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story