தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் சாவு
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வல்லம்,
தஞ்சை காசுக்கடை தெரு அருகில் உள்ள நெல்லுமண்டி சந்து பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ராகுல் (வயது 26). இவர் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். சம்பவத்தன்று ராகுல் மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து ரெட்டிபாளையம் வழியாக ஆலக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஆலக்குடி ெரயில்வே கேட் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே பாம்பு திடீரென வந்ததால் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராகுலின் தாய் பிரியா கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story