ஊழியர்கள் உண்ணாவிரதம்


ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 28 July 2021 9:58 PM IST (Updated: 28 July 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்

திருப்பூர்
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் திருப்பூரில் உள்ள தலைமை அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. செல்போன் கோபுரங்களை மேம்படுத்துவதன் மூலமாக உடனடியாக 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்க வேண்டும். 5ஜி சேவையை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் ஊதியம் வழங்க வேண்டும். கிளஸ்டர் அடிப்படையிலான அவுட்சோர்சிங் முறையை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு தேசிய தொலைதொடர்பு சங்க அந்தோணி மரியபிரகாஷ், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் ராஜசேகர், நிர்வாகிகள் செந்தில்குமார், குருசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநில அமைப்பு செயலாளர் சக்திவேல் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story