ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் சேடர்பாளையத்தை அடுத்த எஸ்.ஆர்.வி.நகரில் ரேஷன் கடையில் தரமான உணவு பொருட்களை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிகாமணி, பிரதாப் மற்றும் மகேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் உணவுக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்ற அரிசி, கோதுமையை ஒதுக்கீடு செய்த ஒன்றிய அரசை கண்டித்தும், ஒன்றிய அரசிடம் தரமான உணவு பொருட்களை தமிழக அரசு கேட்டுப்பெற வலியுறுத்தியும், திருப்பூரில் ரேஷன் கடைகளில் உள்ள தரமற்ற பொருட்களை திரும்பப் பெறாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ரேசன் கடையில் வழங்கப்பட்ட தரமற்ற அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளுடன் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story