விதை நெல் மானியத்தில் வினியோகம்
விதை நெல் மானியத்தில் வினியோகம்
வெள்ளகோவில்
வெள்ளகோவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வட்டாரம், முத்தூர் பகுதியில் கீழ்பவானி பாசன பகுதியில் சுமார் 1500 ஏக்கர் பாசனம் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்ற எதிர்பார்ப்பில் முத்தூர் பகுதியில் உள்ள சின்னமுத்தூர். முத்தூர், ஊடையம், மங்கலப்பட்டி, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் மற்றும் ராசாத்தா வலசு ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல் முத்தூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் 135 நாள் வயதுடைய மத்தியகால ரகமான ஐ.ஆர்.20 ரக நெல் 8.80 டன்களும் 105 வயதுடைய குறுகிய கால ரகமான கோ.ஆர். 51 ரக நெல் 8.35 டன்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரக நெல்லுக்கு அரசால் அனுமதிக்கப்படும் மானியமும் வழங்கப்படுகிறது. இத்துடன் நெல்லுக்கு விதை நேர்த்தி செய்ய தேவையான உயிர் உரங்களும் மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே முத்தூர் வட்டார விவசாயிகள் எதிர்வருகிற பருவத்திற்கு ஏற்ப நெல் மற்றும் நுண்ணுயிர் உரங்களை மானிய விலையில் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story