தினத்தந்தி செய்தி எதிரொலி உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி தொடங்கியது

தினத்தந்தி செய்தி எதிரொலி உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 28 July 2021 10:41 PM IST (Updated: 28 July 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலி உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி தொடங்கியது

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வழிந்தோடியது. இதனால் அண்ணாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். 

இதுகுறித்து நேற்று முன்தினம் ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியை நேற்று தொடங்கியது. இந்த பணி விரைவில் முடிவடைந்து பொதுமக்களுக்கு முழுமையான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story