மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தல் 4 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தல் 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஏமப்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 12½ கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த செந்தில்குமார்(வயது 36), பெரியசாமி(34) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் 4½ கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த திலீப்கிருஷ்ணன்(40), பெரியசாமி(39) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story