வேட்டையாட சென்றபோது தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு


வேட்டையாட சென்றபோது தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 28 July 2021 11:38 PM IST (Updated: 28 July 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

செங்கம்

செங்கத்தை அடுத்துள்ள மேல்செங்கம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக 3 வாலிபர்கள் சென்றுள்ளனர். வனவிலங்குகள் எதுவும் கிடைக்காத நிலையில் மேல்செங்கம் கிராமப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி உள்ளனர். அந்த பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் 3 வாலிபர்களையும் விரட்டி பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்செங்கம் போலீசார் 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். 

இந்த விசாரணையில் அவர்கள் பரமனந்தல் பகுதியை சேர்ந்த  அன்பழகன் (வயது 24) மற்றும் தித்தாண்டப்பட்டு பகுதியை சேர்ந்த சவுந்தராஜன் (24), விமல் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story