ஏலகிரிமலையில் ரூ.2 கோடி நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சி


ஏலகிரிமலையில் ரூ.2 கோடி நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சி
x
தினத்தந்தி 28 July 2021 11:53 PM IST (Updated: 28 July 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலையில் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்ற வழக்கில் 5 ேபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜோலார்பேட்டை

நிலம் எங்களுக்கு தான் சொந்தம்

திருப்பத்தூர் சக்திநகரைச் சேர்ந்தவர் ஜோசப், ஓய்வுபெற்ற தனியார் கல்லூரி பேராசிரியர். இவர் ஜோலார்பேட்டை அருகில் ஏலகிரிமலை கொட்டையூர் கிராமத்தில் 1972-ம் ஆண்டு 75 சென்ட் நிலத்தை தன்னுடைய மனைவி மனோகரி ஜோசப் பெயரில் வாங்கினார். அந்த நிலத்தை சுத்தம் செய்து வேலி அமைப்பதற்காக ஜோசப் மற்றும் அவரின் மகன் கரூன் அசோக் ஆகியோர் கடந்த ஆண்டு அங்குச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த சிலர், இந்த நிலம் எங்களுக்குத் தான் சொந்தம் எனக்கூறி, அதற்கானப் பத்திரத்தை அவரிடம் காண்பித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப், மகன் கரூன்அசோக் இதுகுறித்து திருப்பததூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.

போலி பத்திரம் 

போலீஸ் விசாரணையில் மனோகரி ஜோசப் பெயரில் உள்ள நிலத்தை கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த ராமன், அவரின் மகன் கோவிந்தசாமி, ராமனின் தங்கை காளி, செல்வம், குட்டிநாசி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் போலி பத்திரம் தயாரித்து அபகரிக்க முயன்றது தெரிய வந்தது. 
இதையடுத்து 5 பேர் மீதும் நில அபகரிப்பு வழக்கில் ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த நிலம் ரூ.2 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

Next Story