தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கமுதி,
கமுதி அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிச்சாமி (வயது18), காளீஸ்வரன் (18), முத்துவழிவிட்டான் (20), மாரிச்சாமி (20) ஆகிய 4 பேர் கமுதியில் உள்ள கடைகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பணி முடிந்ததும், புதுப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது கமுதி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த தொழிலாளி சாமுவேல் (55) வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்குநேர்மோதியது. இதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சாமுவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story