மணல் அள்ளிய 3 பேர் கைது
மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏந்தல் சுடுகாடு அருகில் நீரோடை பகுதியில் அனுமதியின்றி நீரோடையை சேதப்படுத்தி கள்ளத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்ததை கண்டனர். இதனை தொடர்ந்து அங்கு சென்று மணல் அள்ளிய ரெகுநாதபுரம் காளியம்மாள் நகர் உதயகுமார் மகன் ராஜ்குமார் (வயது24), நம்புராஜ் (21), வழுதூர் கார்மேகம் மகன் பிரகாஷ் (40) ஆகிய 3 பேரையும் மடக்கி பிடித்து 2 டிராக்டர்கள் மற்றும் 2 டிரைலர்களை பறிமுதல் செய்தனர். இவர்களையும் மணலுடன் சேர்த்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து தப்பி ஓடிய வழுதூர் செல்வம் மகன் விஜயகுமார் என்பவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story