அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போகலூர்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து போகலூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சத்திரக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் முத்தையா தலைமை தாங்கினார்.
போகலூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் லோகிதாசன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுரேஷ், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர் செயலாளர் கோவிந்தன் வரவேற்றார்.
இதில் ஒன்றிய மாணவரணி செயலாளர் சரவணன், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ஜெகதீஸ்வரன், ஒன்றிய இணைச் செயலாளர் கற்பகவள்ளி முருகானந்தம், ஒன்றிய மகளிரணி செயலாளர்அனிதா முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் காளீஸ்வரி விஜயகுமார், போகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன், ஐ.டி. பிரிவு செயலாளர் அனித் மோகன்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குருந்தையா, விஜயராகவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வீரகணபதி, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story