தட்டுப்பாடு இல்லாமல் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
திருவாடானை தொகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
தொண்டி,
திருவாடானை தொகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
நீட் தேர்வு
திருவாடானையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கடம்பாகுடி கணேசன், மாவட்ட துணைச்செயலாளர் சுப்பு, முன்னாள் யூனியன் துணைத் தலைவர் அரசூர் ராமகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் கற்பகவல்லி பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் ஆணிமுத்து கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கொரோனாவுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.ஆயிரம் வழங்க வேண்டும்.தமிழக விவசாயிகள், மாணவர்களை பாதிக்கும் வகையில் செயல்படும் தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.
குடிநீர்
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் திருச்சி முக்கொம்பு பகுதியில் கூடுதல் ஆழ்குழாய் அமைத்து திருவாடானை தொகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றும் கையில் கொடி, பதாகைகளுடன் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அய்யப்பன், கூட்டுறவு சங்க தலைவர் காளிமுத்து, ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், இளைஞரணி செயலாளர் பாண்டி, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சிவா, ஜெயலலிதா பேரவை செயலாளர் செங்கை ராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் கந்தவேலன், ஊராட்சி தலைவர்மோகன்ராஜ், நகர் செயலாளர் பிச்சைக் கண்ணு உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story