பட்டாசுகளை பதுக்கியவர் கைது
சிவகாசியில் பட்டாசுகளை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்களில் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்நது சிவகாசி கிழக்கு போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். அப்போது சுந்தரராஜபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்த 58 பட்டாசு பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.65 ஆயிரத்து 400 என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த முத்துசாமி (வயது 43) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story