அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2021 7:37 PM GMT (Updated: 28 July 2021 7:37 PM GMT)

சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகாசியில் அ.தி.மு.க.வினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.

சிவகாசி, 
சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகாசியில் அ.தி.மு.க.வினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.
தேர்தல் வாக்குறுதிகள்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை அளித்து மக்களிடம் வாக்கு சேகரித்தது. இந்த நிலையில் அதில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் நேற்று  விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். திருத்தங்கலில் வசிக்கும் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது வீட்டின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விலைவாசியை குறைக்க வேண்டும். 
பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனா நோயிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்தி கோஷம் போட்டார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியம், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் முத்துப்பாண்டி, இளைஞரணி கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பாண்டியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல் சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் மேற்கு ஒன்றியம் சார்பில் அ.தி.மு.க.வினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூசாரித்தேவன்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வம்பிழுத்தான்முக்கு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி சசிகுமார், அண்ணா தொழிற்சங்கம் கே.கே.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 33 இடங்களி லும், திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சாத்தூர் 
சாத்தூர் படந்தாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  அ.தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சாத்தூர் நகர செயலாளர் இளங்கோவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் சேது ராமானுஜம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பூபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செட்டியார்பட்டியில் நகர அ.தி.மு.க. செயலாளர் அங்குத்துரை தலைமையிலும், சேத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் பொன்ராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. அவை தலைவர் கொங்கன் குளம் அழகர்சாமி, விருதுநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிசெயலாளர் பரமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி தலைமையில் ராமுதேவன் பட்டியிலும், விஜயகரிசல்குளத்தில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு தலைமையிலும், குகன்பாறையில் விவசாய அணி மாவட்ட செயலாளர் கே.வி.கே.ராஜு தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சூரார்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முத்துச்சாமிபுரத்தில் வெம்பக்கோட்டை யூனியன் துணைத்தலைவர் ராமராஜ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி, பெருமாள் சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story