மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration by AIADMK

பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க. வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெரம்பலூர்
நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க.ஆட்சிக்கு வந்தது. ஆனால் இதில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் நகர அ.தி.மு.க. சார்பில் மேற்கு வானொலி திடலில் உள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.  அப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன் தனது வீட்டின் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். முன்னாள் எம்.பி.யும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான மருதராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் பெரம்பலூர் மாவட்ட சாரணர் பயிற்சி மையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வகுமார் தலைமையில் கவுல்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் நடந்தது
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றக்கோரி தஞ்சையில், வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
5. அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.