அரியலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து அரியலூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. வினர் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி அரியலூரில் உள்ள தனது வீட்டின் முன்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தாமரை. ராஜேந்திரன் கருப்பு சட்டை அணிந்து கையில் வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தார். அவருடன் மாவட்ட அவைத் தலைவர் கணேசன் நகர செயலாளர் செந்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவர் பாஸ்கர் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் தலைமையில் அவர் இல்லத்திற்கு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னவளையம் கிராமத்தில் நகர செயலாளர் பி.ஆர். செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரவர் வீட்டின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Related Tags :
Next Story