எல்லை கருப்பணசாமி கோவில் ஆடி திருவிழா
பழனி அருகே எல்லை கருப்பணசாமி கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.
பழனி:
பழனி அருகே தேக்கந்தோட்டம் பகுதியில் எல்லை கருப்பணசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு பழனி சுற்று வட்டார பகுதி மக்கள், பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது.
இதையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து புளியமரத்துசெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் நேற்று சாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story