மாவட்ட செய்திகள்

தவறி விழுந்து காயம் பிரபல நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + Popular actor Karthik has been admitted to hospital with a fall

தவறி விழுந்து காயம் பிரபல நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி

தவறி விழுந்து காயம் பிரபல நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி
தவறி விழுந்து காயம் பிரபல நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி.
சென்னை,

தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக் தற்போது மற்ற நடிகர்கள் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். வில்லனாகவும் நடிக்கிறார். சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் கார்த்திக், வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால் எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் நடந்ததுபோல் பயங்கரம் மும்பையில் இளம்பெண் கொடூரமாக கற்பழிப்பு
டெல்லியில் நடந்த பயங்கர சம்பவத்தைப்போல, மும்பையில் இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள்: தமிழக அரசு விளக்கம்!
வரும் முன் காப்போம் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
3. முக கவசம், கையுறை அணிந்துவர வேண்டும்: சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதி
கல்லூரி திறப்புக்கான உயர்கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதில் சுழற்சி முறையில் 50 சதவீதம் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்கள் கையுறை, முக கவசம் அணிந்துவர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ஓபிசி-க்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது: சென்னை ஐகோர்ட்டு
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
5. பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் இந்த ஆண்டு 2.90 லட்சம் வீடுகளுக்கு அனுமதி
பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில், இந்த ஆண்டு 2.90 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.