என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம்
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம்.
சென்னை,
பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு கடந்த 26-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். 2 நாட்களில் மொத்தமாக 41 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் 57 ஆயிரத்து 513 பேர் விண்ணப்பப் பதிவு செய்திருப்பதாகவும், இவர்களில் 33 ஆயிரத்து 552 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்திவிட்டதாகவும், அதில் 22 ஆயிரத்து 960 மாணவ-மாணவிகள் சான்றிதழையும் பதிவேற்றம் செய்து முடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந் தேதி வரை இதற்கான விண்ணப்பப் பதிவை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம்.

Related Tags :
Next Story