மாவட்ட செய்திகள்

தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி + "||" + The AIADMK wants to show the true face of the DMK. The purpose of the struggle was to defeat the BJP. Interview with Chairman Annamalai

தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி

தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி
தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி.
ஆலந்தூர்,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொய்யான வாக்குறுதியை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து உள்ளது. தி.மு.க.வின் உண்மை முகத்தை காட்டுவதே அ.தி.மு.க. போராட்டத்தின் நோக்கம். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பா.ஜ.க. மக்களுடன் நிற்கும். தி.மு.க. மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். இந்த விலை உயர்வை பா.ஜ.க.வும் ஏற்றுக்கொள்ளவில்லை. நிச்சயமாக பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை காணப்படும்.

பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு தயார். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மாநில நிதியமைச்சர் பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரலாம் என்று சொல்லட்டும். அப்புறம் பார்க்கலாம். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசிய விஷயங்களை இப்போது பேச வேண்டியது தானே. பெட்ரோல் விலையை குறைக்க முயற்சி எடுக்கப்படும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் பேட்டி
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி.
2. ‘15 கிலோ உடை அணிந்து நடித்த அனுபவம்’ - நடிகை ராய்லட்சுமி பேட்டி
‘15 கிலோ உடை அணிந்து நடித்த அனுபவம்’ - நடிகை ராய்லட்சுமி பேட்டி.
3. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நிதி அமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்
ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நிதி அமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.
5. வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க ஏற்பாடு
வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை