அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
அரக்கோணம்
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு கடந்த 23-ந்் தேதி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசாரிடம் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், அரசு அறிவித்த கொரோனா பரவல் விதிமுறைகளை பின் பற்றாமல் இருந்தது போன்றவைகளுக்காக தலைமை தாங்கி நடத்திய சோகனூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அமர்நாத் மீது அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது அரசு அதி்காரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கல்வித் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் உயர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஆசிரியர் அமர்நாத்தை அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் பணியிடை நீக்கம்செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story