மாவட்ட செய்திகள்

நாசரேத்தில் சலுான் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை + "||" + saloon shopkeeper commits suicide by hanging in nazareth

நாசரேத்தில் சலுான் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை

நாசரேத்தில் சலுான் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை
நாசரேத்தில் சலுான் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
நாசரேத்:
நாசரேத் சந்தி பஜாரில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் பெர்லின் (வயது 35). இவர் நாசரேத் கனகராஜ் தெருவில் தனது மனைவி சரோஜா மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர், மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்துள்ளார். பின்னா் மனைவியிடமிருந்து நகையை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டள்ளது. இதில் மனமுடைந்த அவரது மனைவி,  2 ஆண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெள்ளாளன்விளையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனம் உடைந்த பெர்லின் வீட்டின் சமையலறையில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நாசரேத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.