மாவட்ட செய்திகள்

கயத்தாறில் அ.தி.மு.க. நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை + "||" + in kayatharu,a.d.m.k. administrator commits sucide by hanging

கயத்தாறில் அ.தி.மு.க. நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை

கயத்தாறில் அ.தி.மு.க. நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை
கயத்தாறில் குடும்ப பிரச்சினையில் அ.தி.மு.க. நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கயத்தாறு:
கயத்தாறில் குடும்ப பிரச்சினையில் மனைவி பிரிந்து சென்றதால் அ.தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அ.தி.மு.க. நிர்வாகி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நகர பஞ்சாயத்து 13-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் கார்த்திக் என்ற கருப்பசாமி (வயது 41). தச்சு தொழிலாளியான இவர் அ.தி.மு.க. நகர இளைஞர் பாசறை இணை செயலாளராக இருந்து வந்தார்.
இவருடைய மனைவி முத்துலட்சுமி (38). இவர்களுக்கு மாரீஸ்வரன் (5), ஹரீஸ் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முத்துலட்சுமி கோபித்து கொண்டு கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.
தற்கொலை
இதனால் மனமுடைந்த கார்த்திக் நேற்று காலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த கார்த்திக்கின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.