மாவட்ட செய்திகள்

கழுகுமலை அருகேவிவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை + "||" + rs.7lakhs jewellary,money looted from a farmer house near kalugumalai

கழுகுமலை அருகேவிவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை

கழுகுமலை அருகேவிவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை
கழுகுமலை அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.7 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.7 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பிச்சைதலைவன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குற்றாலநாதன் (வயது 70), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. குற்றாலநாதன் நேற்று முன்தினம் காலையில் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மனைவி, இளைய மகளுடன் சென்றார். அப்போது அவர்கள், வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வெளியில் மறைத்து வைத்து சென்றனர்.
வீடுபுகுந்து...
குற்றாலநாதனின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு திருட திட்டமிட்டனர். அதன்படி அவரது வீட்டின் ஜன்னல் ஓரமாக மறைத்து வைத்திருந்த சாவியை மர்மநபர்கள் நைசாக எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் உள்ள பீரோவை திறந்து, அதில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.3½ லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும்.
போலீசார் வலைவீச்சு
மாலையில் மனைவி, மகளுடன் வீட்டுக்கு வந்த குற்ாலநாதன் தனது வீட்டின் கதவு, பீரோ திறந்து கிடந்ததையும், நகைகள்-பணம் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.