திருவாரூரில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து மறியல் - முக்குலத்து புலிகள் கட்சியினர் 12 பேர் கைது


திருவாரூரில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து மறியல் - முக்குலத்து புலிகள் கட்சியினர் 12 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2021 9:14 PM IST (Updated: 29 July 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து மறியலில் ஈடுப்பட்ட முக்குலத்து புலிகள் கட்சியினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க வலியுறுத்தியும் திருவாரூரில் முக்குலத்து புலிகள் கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது. 

திருவாரூர் ரெயில்வே மேம்பாலம் தஞ்சை சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு தகவல் தொழில்நுட்பபிரிவு மாநில செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். திருவாரூர் நகர செயலாளர் யோகனந்த், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் சுரேஷ், துணை செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மறியல் போராட்டத்தினால் திருவாரூர்-தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர்.

Next Story