கோத்தகிரியில் ஒரே நாளில் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி


கோத்தகிரியில் ஒரே நாளில் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 July 2021 3:45 PM GMT (Updated: 29 July 2021 4:09 PM GMT)

கோத்தகிரியில் ஒரே நாளில் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோத்தகிரி,

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முகாம்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.

தற்போது கிராமங்கள்தோறும் சுகாதாரத்துறையினர் நேராக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட ரோஸ் காட்டேஜ் மற்றும் ஹேப்பிவேலி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 150 பேருக்கு ஹேப்பிவேலி சமுதாய நலக்கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் கல்பனா காட்டேஜ், கிளப் ரோடு மற்றும் ரைபிள் ரேஞ்ச் பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கிளப் ரோடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்களில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டது.

நேற்று ஒரே நாளில் மொத்தம் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களில் அமைந்து உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story