கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி


கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 29 July 2021 4:02 PM GMT (Updated: 29 July 2021 4:02 PM GMT)

கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.10-க்கு விற்பனையானது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. 

தக்காளி விலை வீழ்ச்சி  

கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை கிணத்துக்கடவு சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நடந்த ஏலத்தில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. இதனால் தக்காளியை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் கவலையடைந்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு 

சில நேரத்தில் தக்காளி விலை உயருகிறது. ஒருசில நேரத்தில் அதிகளவில் குறைந்துவிடுகிறது. இதனால் அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 

விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். மேலும் கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் இந்த சந்தைக்கு வருவது வழக்கம். 

தற்போது கேரளாவில் கொரோனா காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமையில் முழு அடைப்பு அமலில் உள்ளதால் வியாபாரிகள் வரத்து குறைந்து உள்ளது. இதுவும் தக்காளி விலை குறைய காரணம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
 
விலை விவரம் 

கிணத்துக்கடவு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:- 

பச்சைமிளகாய் ரூ.40 பீர்க்கன்காய் ரூ.25, பீட்ரூட் ரூ.25, பாகற்காய் ரூ.37, சுரைக்காய் ரூ.25, வெண்டைக்காய் ரூ.30, அவரைக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.30-க்கும் ஏலம் போனது. 

கத்திரிக்காய் (ஒரு பை, 15 கிலோ) ரூ.750-க்கும், முள்ளங்கி (ஒரு பை 20 கிலோ ) ரூ.250-க்கும் ஏலம் போனது. 


Next Story