ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி வில்வமணி (வயது 54). சக்கரவர்த்தி கடந்த ஒருவருடத்துக்குமுன்பு இறந்கதுவிட்டார். இதனால் வில்வமணி தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் அவர் லட்சுமி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதேபோன்று இந்தப்பகுதியில் மேலும் சில இடங்களில் திருட்டு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story