மாவட்ட செய்திகள்

திட்டக்குடி அருகே விவசாயி வீ்ட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை + "||" + 8 lakh jewelery and money looted from a farmer house

திட்டக்குடி அருகே விவசாயி வீ்ட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை

திட்டக்குடி அருகே விவசாயி வீ்ட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை
திட்டக்குடி அருகே பட்டப்பகலில் விவசாயி வீ்ட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள பட்டாக்குறிச்சியை சேர்ந்தவர் பச்சமுத்து(வயது 60), விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி செல்வியுடன் வயலுக்கு சென்றார். பின்னர் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 21 பவுன் நகைகள், ரூ.72 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. 

பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். 

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் ரூ.17 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளை
தேவகோட்டை அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. இரும்பு கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணம் கொள்ளை
கடலூரில் இரும்பு கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. அரசுப்பள்ளி ஆசிரிய தம்பதி வீட்டில் ரூ.6 லட்சம்-150 பவுன் கொள்ளை
அரசுப்பள்ளி ஆசிரிய தம்பதி வீட்டில் புகுந்து ரூ.6 லட்சம், 150 பவுன் நகைகள் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
4. தொழில் அதிபர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை
மதுரையில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் ரூ.3 லட்சம், 38 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. அடகு கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மன்னார்குடியில் அடகு கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.