விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம்
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடலூர் மாவட்டம் அவியனூரை சேர்ந்த விவசாயி ஏழுமலை என்பவர், 600 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தார்.
அப்போது அங்கிருந்த நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளரும், விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக இளநிலை உதவியாளருமான குணசேகரன், அந்த நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய ஏழுமலையிடம் ரூ.22,700-ஐ லஞ்சமாக வாங்கியபோது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைந்து சென்று குணசேகரனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பாக குணசேகரனிடம் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நெல் கொள்முதல் நிலைய அதிகாரி குணசேகரனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஷீலா உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story