பள்ளி ஆசிரியையின் சான்றிதழில் மாறுபாடு. பள்ளி நிர்வாகம் விசாரணை
பள்ளி ஆசிரியையின் சான்றிதழில் மாறுபாடு
அரக்கோணம்
அரக்கோணம் அடுத்த காவனூர் அரசு நிதியுதவி (சி.எஸ். ஐ.) தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் மேரி தைரிய நெஞ்சினி. இவரது சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இவரது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள மதிபெண்ணும், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் உள்ள மதிப்பெண்களும் மாறுபட்டுள்ளது.
இது தொடர்பாக சி.எஸ்.ஐ. பள்ளி தாளாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து போலி சான்றிதழ் மூலம் வேலையில் சேர்ந்திருந்தால் நடவடிக்கை எடுத்த பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் ரமேஷ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story