மாவட்ட செய்திகள்

ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல். அண்ணன்- தம்பி கைது + "||" + Seizure of Rs. 1 lakh tobacco products

ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல். அண்ணன்- தம்பி கைது

ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல். அண்ணன்- தம்பி கைது
ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருவலம்

வேலூர் மாவட்டம், பொன்னை பகுதியில் உள்ள மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக பொன்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று முன்தினம் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த பொன்னை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார் பொன்னை பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு மளிகை கடையில்  சோதனை செய்தனர். 

அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர்கள் வெங்கடேசன் (வயது 49), அவரது தம்பி துரைமுருகன் (41) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து பொன்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டிவனத்தில் ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
திண்டிவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.