மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வருகை + "||" + 9 thousand corona vaccines visit

வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வருகை

வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வருகை
9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வருகை
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு நிரந்தர தடுப்பூசி முகாம், ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை சுமார் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தன. இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து மேலும் 6 ஆயிரம் கோவிஷீல்டு, 3 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் வேலூருக்கு வந்தன.

 அவை நிரந்தர தடுப்பூசி முகாம்கள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் நேற்று 25 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-வது டோஸ் போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.