இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 July 2021 10:59 PM IST (Updated: 29 July 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை

தமிழகத்துக்கு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய அனுமதி வழங்க கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார்.  இதில் கலந்து கொண்டவர்கள் கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு, மத்திய அரசை கண்டித்து  கோஷங்கள் எழுப்பினர்.

 நிர்வாகிகள் மணிபாரதி, ராஜா, தினேஷ் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரேஸ்கோர்ஸ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story