மன்னார்குடி அருகே பால்காரரை தாக்கி 23 பவுன் நகை வழிப்பறி மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மன்னார்குடி அருகே பால்காரரை தாக்கி 23 பவுன் நகைகளை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மன்னார்குடி:-
மன்னார்குடி அருகே பால்காரரை தாக்கி 23 பவுன் நகைகளை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பால் வியாபாரி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாடர்ன் நகரை சேர்ந்தவர் நெடுமாறன் (வயது52). பால் வியாபாரி. நேற்று முன்தினம் அதிகாலை இவர் விற்பனைக்கு தேவையான பாலை கொள்முதல் செய்வதற்காக மன்னார்குடியில் இருந்து மதுக்கூர் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
சுந்தரக்கோட்டை என்ற இடத்தில் சென்றபோது மர்ம நபர்கள் 3 பேர் அவரை வழிமறித்து அருகில் உள்ள தைல மர தோப்பிற்கு அழைத்துச் சென்று தாக்கி அவர் அணிந்திருந்த சங்கிலிகள் உள்ளிட்ட 23 பவுன் நகைகளை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.
வலைவீச்சு
நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து நெடுமாறன் பரவாக்கோட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பால் வியாபாரியிடம் நகைகள் பறித்து செல்லப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story