கல்லல்,
பனங்குடி ெரயில் நிலையம் உருவாகி 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கொரோனா தொற்று பரவிய காலம் தொடங்கி இதுவரை இந்த ரெயில் நிலையத்தில் எந்த ரெயில்களும் நிற்காததால் அப்பகுதியை சேர்ந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். திருச்சி-ராமேசுவரம் ரெயில், திருச்சி-விருதுநகர் ரெயில், மன்னார்குடி-விருதுநகர் ரெயில் முன்பு இங்கு நின்று சென்றது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் சிறப்பு ெரயில்கள் இயங்கி வருகிறது. ஆனால் எந்த ரெயில்களும் இங்கு நிற்பதில்லை. எனவே இந்த வழியாக செல்லும் ரெயில்கள் இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனங்குடியை சுற்றி உள்ள கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.