35 ஆயிரம் தென்னை மரக்கன்றுகள் விற்பனை-கலெக்டர் தகவல்
எஸ்.வி.மங்களம் தென்னை நாற்றுப்பண்ணையில் ஆண்டுேதாறும் 35 ஆயிரம் தென்னை மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
சிங்கம்புணரி,
எஸ்.வி.மங்களம் தென்னை நாற்றுப்பண்ணையில் ஆண்டுேதாறும் 35 ஆயிரம் தென்னை மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
ஆய்வு
இங்கு நெட்டை, குட்டை வகை மற்றும் ஒட்டு வகையான தென்னை கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்பகுதியில் குட்டை, நெட்டை, ஒட்டு வகை கன்றுகள் அதிக அளவு விவசாயிகளிடம் வரவேற்பு பெற்று உள்ளது. அந்த வகையில் ஆண்டொன்றுக்கு நெட்டை வகை தென்னங்கன்றுகள் 14 ஆயிரமும், குட்டை, நெட்டை, ஒட்டு வகை தென்னங்கன்றுகள் 21 ஆயிரமும் என 35 ஆயிரம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த அரசு பண்ணையில் நெட்டை தென்னங்கன்று ரூ.60-க்கும் குட்டை, நெட்டை, ஒட்டு வகை கன்றுகள் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் தனியார் பண்ணையில் ஒப்பிடுகையில் அங்கு ஒரு கன்று ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் 500 ஏக்கர் வரை நடவு செய்து பராமரிக்கவும், பழைய தென்னங்கன்றுகள் பழுதடைந்து அல்லது நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு எவ்வித பயனும் இன்றி இருக்கும் மரங்களை அகற்றி அங்கு புதிய தென்னங்கன்று வைத்து பராமரிக்கும் வகையில் ஒரு எக்டருக்கு ரூ.53,500 வீதம் முழு மானியம் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணை விவசாய திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனீ வளர்ப்பை பார்வையிட்டார்
இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் பன்னீர்செல்வம், உதவி இயக்குனர் அம்சவேணி, வேளாண்மை உதவி அலுவலர் சாமுண்டீஸ்வரி, எஸ்.வி.மங்களம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சீனிவாசன், அ.காளாப்பூர் அம்பலகாரர் பார்த்திபன் அம்பலம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர
Related Tags :
Next Story