மாவட்ட செய்திகள்

6 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையம் + "||" + Corona vaccination center at 6 locations

6 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையம்

6 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையம்
அருப்புக்கோட்டையில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் நகராட்சி சுகாதார துறை சார்பில் தினமும் ஒவ்வொரு பகுதியில் முகாம் அமைத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் பொதுமக்கள் பலருக்கு எங்கு முகாம் நடக்கிறது என்பது தெரியாமல் தடுப்பூசிக்காக அலையும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சொக்கலிங்கபுரம், தெற்கு தெரு, எஸ்.பி.கே. பள்ளி சாலை ஆகிய இடங்களில் உள்ள நகராட்சி சுகாதார மையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 6 இடங்களில் நிரந்தரமாக கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களுக்கு தினந்தோறும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ராஜபாண்டியன், அய்யப்பன், முத்து காமாட்சி, சரவணன், சரத்பாபு உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.