மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள கருப்பு கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுத்து (வயது 40). கார்பெண்டரான இவர், கடந்த 27-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக தோகைமலை-மணப்பாறை மெயின் ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் மேல மஞ்சமேட்டை சேர்ந்த மருது என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாலமுத்து மோட்டார் சைக்கிள் மீது, மருது ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலமுத்து சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாலமுத்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாலமுத்து மனைவி சந்திரா கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் மருது மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story