வெடிபொருட்களுடன் 4 பேர் கைது
தொண்டி அருகே வெடிபொருட்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
தொண்டி அருகேயுள்ள திருப்பாலைக்குடி கடல் பகுதியில் வெடிவைத்து மீன் பிடிப்பதாக தேவிபட்டினம் கடற்கரை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் பேரில் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேச மூர்த்தி, அய்யனார் தனிப்பிரிவு போலீஸ்காரர் இளையராஜா ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அந்த படகை சோதனையிட்டுள்ளனர்.அதில் 22 ஜெலட்டின், 5 டெட்டனேட்டர்கள், சுமார் 2 அடி பீஸ் வயர், 1 ஜி.பி.எஸ். கருவியும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து படகு மற்றும் வெடி பொருட்களை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக மோர்ப்பண்ணையை சேர்ந்த கென்னடி (வயது 28), கோவிந்தராஜ் (31), ஆறுமுகம் (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் விசாரணை நடத்தியதில் கடலில் வெடி வீசி மீன் பிடிப்பதற்காக வைத்திருந்ததாக தெரிவித்தனர். மேலும் இவர்களுக்கு வெடிபொருட்கள் சப்ளை செய்த தொண்டி புதுகுடியைச் சேர்ந்த கண்ணன் என்பவரையும் கைது செய்தனர்.
தொண்டி அருகே வெடிபொருட்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
அப்போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று கடற்கரையை நோக்கி வேகமாக சென்று மோர்ப்பண்ணை கடற்கரையோரமாக கடலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த சிலர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர்.
4 பேர் கைது
மேலும் விசாரணை நடத்தியதில் கடலில் வெடி வீசி மீன் பிடிப்பதற்காக வைத்திருந்ததாக தெரிவித்தனர். மேலும் இவர்களுக்கு வெடிபொருட்கள் சப்ளை செய்த தொண்டி புதுகுடியைச் சேர்ந்த கண்ணன் என்பவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story